முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் அணியில் இணைந்தார் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      விளையாட்டு
13-Ram-51

Source: provided

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் மிக இளம் ஐ.பி.எல்.  வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி இணைந்துள்ளார்.

ஐ.பி.எல். தொடர்...

ஐ.பி.எல்.  மெகா ஏலத்தின் போது, வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நினைவுகூரத்தக்கது.

ரூ.1.10 கோடிக்கு ஏலம்...

ஐ.பி.எல்.  2025 தொடர் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட வைபவ் சூரியவன்ஷியை, ரூ.1.10 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐ.பி.எல்.  தொடர் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்து, ஐ.பி.எல்.  தொடரில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

12 வயதில் சாதனைகள்...

ரஞ்சி டிராபியில் பிகார் அணிக்காக தனது முதல் தரப்போட்டியில் அறிமுகமானவர் வைபவ் சூரியவன்ஷி. பிகாருக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய இரண்டாவது இளைய வயதுடையவர் ஆவார். பிகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடி 5 போட்டிகளில் சுமார் 400 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார். 

இளைய இந்தியர்... 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றவர். 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை, 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான மிகவும் இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர்.

வீடியோ வெளியீடு...

இந்த நிலையில், அணியுடன் இணைந்த வைபவ் சூரியவன்ஷியை வரவேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் விடியோவை வெளியிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ராஜஸ்தான் விளையாடவுள்ள முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வைபவ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து