தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Rahul 2024-12-03

சுல்தான்பூர், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மீது உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. 

 

ஆனால் வக்கீல்கள் போராட்டம் காரணமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ராகுல் காந்திக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனவே அவர் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து