முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்: பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வருகை

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்      அரசியல்
Stalin 2022 12 29

சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வந்துள்ளனர். 

தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக 7 மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமானம் மூலம் சென்னை வந்தார்.

அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். தொடர்ந்து கேரளாவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பினோய் விஸ்வம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் இது வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என்றார். இதே போல பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் பல்விந்தர் சிங்கும் சென்னை வந்தார். அவருக்கு எம்பிக்கள் அருண், வரவேற்பு அளித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய கூட்டாட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்" என குறிப்பிட்டுள்ளார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களை முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.

கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் 58 மாநில கட்சிகள் தங்களது கருத்து வேறுபாடுகளை மீறி "நியாயமான தொகுதி மறுவரையறை" என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து கலந்து கொண்டன எனவும், அது குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பை இந்த ஒற்றுமை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தொகுதி மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பதாக தி.மு.க. மருத்துவர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான நா.எழிலன் தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், மணி, எம்.கே.பிரேம சந்திரன், ஆந்திராவிலிருந்து மிதுன் ரெட்டி, தெலங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.டி.ராமராவ், வினோத் குமார் எம்.பி., பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், கர்நாடகாவிலிருந்து துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் இடங்கள் 80-ல் இருந்து 143 ஆகவும், பிகாரில் 40-ல் இருந்து 79-ஆகவும், மத்திய பிரதேசத்தில் 29-ல் இருந்து 52-ஆகவும் அதிகரிக்கக் கூடும். ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் குறைவாகத்தான் இருக்கும். உரிமைக்கான குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்க நமது பிரதிநிதித்துவம் இருந்தால் தான் முடியும். இவற்றை உணர்ந்துதான் முதல்வர் களம் அமைக் கிறார்; நியாயம் கேட்கிறார். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து