Idhayam Matrimony

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் சி.பி.ஐ. இறுதி அறிக்கை தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      இந்தியா
CBI 2024-11-26

Source: provided

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ. இந்த வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு வழக்கு கடந்த ஆகஸ்ட் 2021ம் ஆண்டு பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா, அவரது உறவினர்கள் மற்றும் பிறருக்கு எதிராகவும், மற்றொன்று செப்டம்பர் மாதம் ரியாவால் ராஜ்புத்தின் சகோதரி மற்றும் மருத்துவர் மீதும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளின் இறுதி அறிக்கை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் இறுதி அறிக்கையை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து