முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கலில் ஹர்பஜன் சிங்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      விளையாட்டு
Harbhajan-Singh 2023-10-21

Source: provided

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவெறி கருத்துகளால் விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஹர்பஜன் சிங் வர்ணனை செய்தார்.

 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. ராஜஸ்தானின் நட்சத்திர வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவருமான ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வழங்கி மோசமான சாதனையைப் படைத்தார். இதுகுறித்து வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங் பேசுகையில், “லண்டனின் கருப்பு நிற டேக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் (ரன்கள்) அதிகளவில் இருக்கிறது” என்று விமர்சனம் செய்தார். இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, தான் இனவெறியால் பாதிக்கப்பட்டதாக ஹர்பஜன் சிங் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்த கருத்துகளை பகிர்ந்து தற்போது ஹர்பஜன் சிங்கே இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக பதிவிட்டு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

____________________________________________________________________________

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள்

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 76 ரன்களை வழங்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 242 ரன்கள் எடுத்தது. 44 ரன்களில் ஆட்டத்தை வென்றது கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இதற்கு முன்னர் கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதை தற்போது மிஞ்சியுள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர்கள்:  0/76 - ஆர்ச்சர் - 2025ம் ஆண்டு சீசன், 0/73 - மோஹித் சர்மா - 2024ம் ஆண்டு சீசன்,  0/70 - பஸில் தாம்பி - 2018ம் ஆண்டு சீசன்,  0/69 - யஷ் தயாள் - 2023ம் ஆண்டு சீசன், 1/68 - ரீஸ் டாப்லி - 2024ம் ஆண்டு சீசன்

____________________________________________________________________________

ஸ்டம்பிங்கை புகழ்ந்த ஹேடன்

43 வயதான தோனி, விளையாட்டு களத்தில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்த கேப்டனான தோனி, தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தற்போது விளையாடாத நிலையிலும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் அபாரமாக உள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் செயல்பட்டார்.

மும்பைக்கு எதிரான போட்டியில்துல்லிய செயல்பாட்டை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். அந்த பட்டியலில் ஹேடனும் இணைந்துள்ளார். “அவருக்குள் அந்த ஃபயர் இன்னும் அப்படியே இருக்கிறது. நூர் அகமது பந்தை லெக் திசையில் வீசிக் கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் முன்னாள் இருப்பதால் பகுதி அளவில் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் பந்தை பிடித்து ஸ்டம்ப் செய்தது அபாரம். அதில் குயிக் டைமிங், குட் விஷன் மாதிரியானவை அடங்கி உள்ளது” என ஹேடன் தெரிவித்துள்ளார். “ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனி போன்ற ஒருவர் இருப்பது எனக்கு நல்ல சப்போர்ட்டாக அமைந்துள்ளது. அவர் சூர்யகுமாரை ஸ்டம்பிங் செய்த விதம் அபாரம்” என ஆட்டத்துக்கு பிறகு நூர் அகமது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து