முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றப் பணிகளிலிருந்து நீதிபதி யஷ்வந்த் விலக்கல்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், அடுத்த உத்தரவு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் உயர் நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கிறது. நீதிபதி யஷ்வந்த் வர்மா அமர்வு முன்பு பட்டியலிடப்பட்ட வழக்குகளின் விசாரணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீவிபத்து நேரிட்டதன் மூலம், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவருக்கு எதிரான விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த 14-ம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் ஓா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தபோது பாதி எரிந்த நிலையில் 4 முதல் 5 மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்ட தகவல் அண்மையில் வெளியானது. விபத்தின்போது கண்டறியப்பட்ட பணம் குறித்து விளக்கமளிக்குமாறு யஷ்வந்த் வா்மாவுக்கு கடிதம் அனுப்பிய நீதிபதி உபாத்யாய, விபத்து நிகழ்ந்த இல்லத்தின் அறை எப்போதும் பூட்டி வைக்கப்பட்டிருந்ததும், அந்த அறை மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அறைக்கு அருகில் உள்ளதும் காவல் துறை ஆணையா் மூலம் தெரியவந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டாா்.

மேலும் அந்தப் பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது?, தீ விபத்தில் எரிந்த பணத்தை மறுநாள் காலையில் அப்புறப்படுத்தியது யாா் என்று நீதிபதி உபாத்யாய கேள்வி எழுப்பினாா். நீதிபதி உபாத்யாயவின் கேள்விகளுக்கு யஷ்வந்த் வா்மா அனுப்பிய பதிலில், ‘எனது அதிகாரபூா்வ இல்ல வளாகத்தில் உள்ள பணியாளா் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பழைய பொருள்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. பூட்டப்படாத அந்த அறைக்கு எனது இல்லத்தின் பிரதான நுழைவாயில் வழியாகவும், பணியாளா் குடியிருப்பின் பின்வாசல் வழியாகவும் செல்ல முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து