முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரஸ்ஸிங் ரூமில் லக்னோ வீரர்களிடம் உரிமையாளர் கோயங்கா பேசியது என்ன?

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

புதுடெல்லி : முதல் போட்டியிலேயே வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்ற கோயங்கா அங்கு என்ன கூறினார்  என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியிடம் தோல்வி...

 ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. கடந்த வருடம் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் மெகா ஏலத்தை தொடர்ந்து லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில்  முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

ஏமாற்றம்...

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். 

தயாராவோம்...

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம். அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது. என்று கோயங்கா கூறினார்.

கடுமையாக...

2024 ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கே.எல் ராகுலிடம் மைதானத்திலேயே  கடுமையாக பேசியது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து