முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி : நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  

நிதி மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (மார்ச் 25) தொடங்கியது. விவாதத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகல் 2 மணி முதல் பதிலளித்தார். அப்போது அவர், “2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப சீர்திருத்தங்களைச் செய்வதே பட்ஜெட்டின் நோக்கமாகும். வரி உறுதியை வழங்குவது, வணிகம் செய்வதை எளிதாக்குவது ஆகிய சீர்திருத்தங்களையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்துறைப் பொருட்களுக்கான ஏழு சுங்க வரி விகிதங்களை நாங்கள் நீக்கியுள்ளோம். வரியை 21 சதவீதத்திலிருந்து 8% ஆகக் குறைத்துள்ளோம்.   எந்தவொரு பொருட்களின் மீதும் வரிகளை உயர்த்தவில்லை. வருமான வரி விகிதங்களையும் நான் உயர்த்தவில்லை. எரிபொருட்களுக்கான வரி விகிதம் குறித்து தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்புவார்களேயானால், அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் விலை குறைப்பு தொடர்பாக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்பதே அந்த கேள்வி.

அரிய நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் நோயாளிகளுக்கு ஐஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆராய்ச்சிக்கான இறக்குமதிக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மத ஸ்தலங்களிலிருந்து வரும் பிரசாதங்களுக்கும் ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.யைக் குறைப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள் தணிக்கையாளரின் சான்றிதழை அனுப்பியவுடன், அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டுவிட்டது. நாங்கள் செஸ் வசூலிக்கவில்லை என தெரிவித்தார். அமைச்சரின் விளக்கத்தை அடுத்து நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து