முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ரூ. 1 கோடியில் ஏற்படுத்தப்படும் : சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-12-03

Source: provided

சென்னை : கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக மாநில கனி ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில் சட்டசபையில் நேற்று (மார்ச் 24) நீர் வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து, இத்துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  இயற்கை வளங்கள் துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புவிசார் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் தொடர்பாக துறையின் அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் விதமாக ஒரு திட்ட மேலாண்மை அலகு நிறுவப்படும். கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக மாநில கனி ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும்.

ரூ.37.50 லட்சத்தில் இரண்டு புவி தொழில்நுட்ப மையங்கள் திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம் கொடக்கல் கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும். ரூ.14 லட்சத்தில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் தருமபுரி மாவட்டம் கடத்தூர் காப்புக் காட்டில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில், ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை மென்பொருள் தொகுப்பு ரூ.75 லட்சத்தில் உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து