தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள பா.ஜ.க. தலைவராக முன்னாள் மத்திய அமைசர்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      இந்தியா
Rajeev 2023 06 13

Source: provided

கேரளா  பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன் தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் ஞாயிற்றுக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் கவுன்சில் கூட்டம் நேற்று காலை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநிலத்தின் தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வாகியுள்ள ராஜீவ் சந்திரசேகா், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சராக மத்திய பாஜக கூட்டணி அரசில் பொறுப்பு வகித்துள்ளாா். பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா், கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் தலைவா் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து