முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரேஷன் கடைகள் வரும் 29-ம் தேதி இயங்கும்

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
Ration--Atm-2024-09-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் வருகிற 29-ந்தேதி வழக்கம்போல் இயங்கும் என்று உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளன்று, ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29-ந் தேதி, சனிக்கிழமையாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31-ந்தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாகும். இந்த மாதத்தின் கடைசி 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்களாக வருவதால், குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, வருகிற 29-ந்தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டு, வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 hours ago
View all comments

வாசகர் கருத்து