முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
Shekharbabu 2024-06-24

Source: provided

கோவை : திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்களும் யாத்ரீகர்களும் ஆண்டு முழுவதும் வருகிறார்கள். இங்கு குடிநீர், கழிவறை, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது விரைவில் குடமுழுக்கு நடத்துவது உள்ளிட்ட கோயில் சீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட வசதிகள் விரைவாக செய்து முடிக்கப்படும். பக்தர்கள் தங்கும் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டப்படுகிறது. அதன் முகப்பு வடிவம் சாதாரணமாக இருக்கிறது. அதை பிரம்மாண்டமாக வடிவமைக்க கூறி உள்ளேன். திருச்செந்தூர் புகழை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறேன். 

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதை அகற்றவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு தேவையைான கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றியும் திட்டமிடப்படவுள்ளது. பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அமைச்சர் சேகர்பாபு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து