முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அட்டை வைத்திருப்பவரா நீங்கள்? - மாவட்ட கலெக்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      தமிழகம்
Ration-shop

Source: provided

சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கைவிரல் ரேகைப் பதிவு செய்வதற்கான அவகாசம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன. ஏற்கனவே விரல் ரேகை பதிவு செய்தவர்களாக இருந்தாலும் கூட, நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது அட்டையில் இருக்கும் அனைவரும் ரேகை பதிவு செய்து முடித்தாகிவிட்டதா? இல்லை மீண்டும் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டுமா? என்பதை அனைவரும் உறுதி செய்துகொள்வது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை முழுமையாகப் பெற உறுப்பினா்கள் அனைவரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல்ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும், விரல்ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தால், அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களது கை விரல்ரேகையைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து