முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு புள்ளிவிவரமே சாட்சி துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

சென்னை: முதல்வர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு புள்ளிவிவரமே சாட்சி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டின் மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன்   இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும்.

இந்நிலையில், முதல்வர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு புள்ளிவிவரமே சாட்சி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதல்வர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப் புள்ளிவிவரமே சாட்சி.

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் முதல்வரின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் ' என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து