Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் இருந்து ஓய்வா? - எம்.எஸ். டோனி பதில்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2023-10-03

Source: provided

சென்னை : ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.

தொடர் தோல்வி...

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐ.பி.எல். சீசனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

பேசுபொருள்...

சி.எஸ்.கே.வின் தொடர்ச்சியான தோல்விகள் ஒருபுறமிருக்க, எம்.எஸ்.டோனி தாமதமாக களமிறங்குவது நடப்பு ஐ.பி.எல். தொடரில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது. அதன் பின், டோனியின் உடல் முன்பு போன்று இல்லை, அவர் பேட்டிங் செய்யும் இடத்தை ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரே முடிவு செய்வார் என பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முற்றுப்புள்ளி...

டில்லி கேபிடல்ஸுக்கு எதிரான சி.எஸ்.கே.வின் கடந்த போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியை டோனியின் பெற்றோர் நேரில் காண வந்திருந்தனர். இதனால், டில்லிக்கு எதிரான போட்டியுடன் டோனி ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் பரவின. ஆனால், ஓய்வு குறித்து டோனியே முடிவு செய்வார் என தெரிவித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்  பிளெமிங்.

 இன்னும் 10 மாதங்கள்... 

ஐ.பி.எல்.-லிருந்து டோனி ஓய்வு பெறுவது குறித்து  பாட்காஸ்ட் ஒன்றில் டோனிபேசியதாவது: நான் இன்னும் ஐ.பி.எல். தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் விளையாடுகிறேன். எனக்கு தற்போது 43 வயதாகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் முடிவில் எனக்கு 44 வயதாகி இருக்கும். அதனால், அடுத்த ஐ.பி.எல். சீசனில் விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. 

உடல் முடிவு செய்யும்...

ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவதைக் காட்டிலும், எனது உடல்தான் நான் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.டோனி 76 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து