முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் பவனி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
SON 2024-04-13

Source: provided

சென்னை : புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறு நேற்று தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்ப பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர். குறுத்தோலை பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பாடல்களைப் பாடி ஊர்வலமாக சென்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் ஜெருசலேம் நகருக்குள் வெற்றிகரமாக நுழைந்ததை நினைவுகூரும் வகையில் 'குருத்தோலை ஞாயிறு' கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு புனித நூலான பைபிளின் நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகர மக்கள் பனைமரக் கிளைகளை அசைத்தும், சாலையில் அங்கிகளை விரித்தும் இயேசு கிறிஸ்துவை வரவேற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 'குறுத்தோலை ஞாயிறு' தினத்தை கொண்டாடுகின்றனர்.

'குருத்தோலை ஞாயிறு' என்பது புனித வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த புனித வாரம் ஈஸ்டர் பண்டிகையுடன் நிறைவு பெறுகிறது. 'குருத்தோலை ஞாயிறு' தினத்தில் கிறிஸ்தவர்கள் குறுத்தோலை ஏந்தி பவனி மேற்கொள்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று 'குறுத்தோலை ஞாயிறு' கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒன்றுகூடி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் கையில் குறுத்தோலைகளை ஏந்தியபடி பவனி மேற்கொண்டனர். இதே போல், ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் 'குறுத்தோலை ஞாயிறு' கடைபிடிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், குறுத்தோலைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

காரைக்காலில் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பாடல்களைப் பாடி ஊர்வலமாக சென்றனர். அதே போல், ராமநாதபுரத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குறுத்தோலைகளை கைகளியில் ஏந்தி, ஊர்வலமாக சென்று தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். மதுரை கத்தீட்ரல் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் அவர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து