எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொல்கத்தா : வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள வக்பு சொத்துக்களை நிர்வகிக்க முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் வக்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினை எதிர்த்து நாடுமுழுவதும் ஏற்பட்ட போராட்டங்களில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் நகரும் ஒன்று. அங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு நடந்த வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. மாவட்டத்தில் சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் அதிகமாக கூடுவதைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமைதியை நிலைநாட்ட மத்திய படைகளை நிலைநிறுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் சனிக்கிழமை கூறும் போது, "நிலைமை மிகவும் மோசமாகவும், நிலையற்றதாகவும் உள்ளது. மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் போது, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மவுன பார்வையாளராக இருக்க முடியாது" என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே, அனைத்து பிரிவு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்று தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சட்டத்தைக் கொண்டுவந்து மாநில அரசு இல்லை, மத்திய அரசுதான் என்று தெரிவித்த மம்தா, இந்தச் சட்டத்தை மாநில அரசு ஆதரிக்கவில்லை என்றும் அச்சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்குவங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி சுமார் 400 இந்துக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மேற்குவங்கத்தில் மதத்துன்புறுத்தல் நடப்பது உண்மையானது. திரிணமூல் காங்கிரஸின் திருப்தி படுத்தும் அரசியல் தீவிரவாத சக்திகளுக்கு தைரியத்தை தந்துள்ளது. இந்துக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நமது மக்கள் தங்களின் சொந்த நிலத்தில் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மாநில கவர்னர் சி.வி. ஆனந்த் போஸ் மாநிலத்தின் தற்போதைய கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், "சரியான நேரத்தில் தலையீட்டு சரியான முடிவினை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சில போலீஸ் வாகனங்களின் மீது கற்களை வீசினர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே எந்த குண்டர்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசு போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக டிஜிபி ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அடுத்த வருடம் மேற்குவங்கம் பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், வக்பு சட்டத்துக்கு எதிரான இந்த வன்முறை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் அரசியல் சவாலாக மாறியுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆசிரியர் நியமனங்களை சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்துள்ள நிலையில், 26,000 ஆசிரியர்களின் போராட்டத்தினை மாநில அரசு எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த வன்முறை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்
14 Apr 2025திருப்பூர் : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தம் அளிக்கிறது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
-
குட் பேட் அக்லி விமர்சனம்
14 Apr 2025ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது மகனுக்காக ’பேட்’ சுபாவத்தை விட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை
-
அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும்: ஓ.பி.எஸ். தமிழ் புத்தாண்டு வாழ்த்து
14 Apr 2025சென்னை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துளார்.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல்..? - தமிழ்நாடு உயர் கல்வித்துறை அதிர்ச்சி
14 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த விவகாரம் நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்ற உத்தரவின் மூல
-
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்..!
14 Apr 2025நய்பிடாவ் : மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ள நிலைியல், இந்திய விமானப்படை விமானம் மீது
-
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு தரிசனம்
14 Apr 2025சென்னை : தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-
பழங்குடியின மக்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்தி
-
தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம் தகவல்
14 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
-
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
14 Apr 2025மும்பை : சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
செல்வப்பெருந்தகை பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Apr 2025சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-04-2025
14 Apr 2025 -
அன்பை விதைக்கும் அரசியல் வலுவானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும்.
-
கொடுங்கையூர் எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்
14 Apr 2025சென்னை : கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூ
-
தமிழக அரசின் கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : கல்வித்துறை அறிவிப்பு
14 Apr 2025சென்னை, : அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணிகள் தீவிரம்
14 Apr 2025சென்னை : ஐ.சி.எப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-
நெருப்புடன் விளையாடாதீர்கள்: ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை
14 Apr 2025டாக்கா : நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும் என்று ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சோனி பிக்சர்ஸ் வழங்கும் பேடிங்டன் இன் பெரு
14 Apr 2025மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பேடிங்டன் என்ற படம் கடந்த 2014 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது.
-
சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரேபிடோ டிரைவர் கைது
14 Apr 2025சென்னை : சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துதான் போட்டி: சீமான்
14 Apr 2025சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம்
14 Apr 2025சென்னை : தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என
-
சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரியில் ரூ.44.50 கோடி மதிப்பில் புதிய விடுதிக் கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
14 Apr 2025சென்னை : சென்னை, சைதாப்பேட்டையில் எம்.சி.
-
சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
14 Apr 2025சென்னை, : ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.
-
கொள்ளையடித்தவர்களை பிரதமர் விடமாட்டார்: சோக்ஸி கைது குறித்து மத்திய அமைச்சர்
14 Apr 2025புதுடெல்லி : ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார் என நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி கைது குறித்து மத்திய இணை அ
-
ரெட் ப்ளவர் - 2047AD
14 Apr 2025நடிகர் விக்னேஷ் நடிக்கும் தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படம் ரெட் ப்ளவர் 2047AD.
-
அரசு பஸ்களில் 3 நாட்களில் 4.50 லட்சம் பேர் பயணம்
14 Apr 2025சென்னை : 3 நாட்ககளில் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.