முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி சார்பில் வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      இந்தியா
Whatsapp

Source: provided

மும்பை : வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வாட்ஸ் அப் சேனலை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறுஞ்செய்தி, தொலைக்காட்சி - செய்தித்தாள் - டிஜிட்டல் தளங்களில் விளம்பரம் மூலமாக இந்த விழிப்புணர்வை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் சேனல் மூலம் இன்னும் பரவலான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க முடியும் என ஆர்.பி.ஐ. எதிர்பார்க்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் போலி செய்திகள் மற்றும் மோசடி தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அதுவும் நிதி சார்ந்த சேவைகளில் இதன் தாக்கம் மிகவும் அதிகம். அதை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் சேனல் மூலம் நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்க ஆர்.பி.ஐ. முன்வந்துள்ளது.

‘மோசடிகளை தவிர்ப்பது எப்படி?’, ‘வங்கி வாடிக்கையாளர்களின் உரிமைகள்’, ‘அண்மைய ஆர்.பி.ஐ. விதிகள் மற்றும் கொள்கைகள்’, ‘வங்கி சார்ந்த போலி செய்திகள்/தகவல் குறித்த விளக்கம்’ போன்றவற்றை இந்த வாட்ஸ்அப் சேனலின் சப்ஸ்கிரைபர்கள் பெறலாம். இதில் இணைய விரும்பும் பயனர்கள் பின்வரும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து இணையலாம். ஆர்பிஐ-யின் இந்த சேனல் 99990 41935 என்ற எண் கொண்ட பிசினஸ் கணக்கு மூலம் இயக்கப்படுகிறது. பயனர்கள் சம்பந்தப்பட்ட கணக்கு மெட்டாவின் சரிபார்க்கப்பட்ட குறியீட்டை  பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு இணையலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து