முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      இந்தியா
Earthquack 2024-12-06

Source: provided

புதுடெல்லி : இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இமயமலை நகரம் முதல் மத்திய ஆசியாவின் நகரம் வரையில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை குலுங்கச் செய்த இந்த நிலநடுக்கங்கள், அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன.

மண்டியில் நிலநடுக்கம்: முதல் நிலநடுக்கம் இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் காலை 9 மணிக்கு உணரப்பட்டது. பூமியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் (என்.சி.எஸ்.) தெரிவித்துள்ளது.  

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் : இதற்கு சிறிது நேரத்துக்கு பின்பு மத்திய மியான்மரின் மெய்க்டிலா அருகே 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கும் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28ம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பில் சுமார் 3,600 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.  

 மார்ச் பூகம்பத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத மாண்டலே மற்றும் நேபிடோ நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த புதிய நிலநடுக்கம் சற்று வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகள், கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.  இந்த நிலநடுக்கத்தால் புதிய உயிரிழப்புகள் பதிவாகவில்லை.  

தஜிகிஸ்தானில் இரண்டு நிலநடுக்கங்கள்: அதேபோல் தஜிகிஸ்தானில் காலை 9.54 மணிக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவானது. அருகில் உள்ள நகரங்களில் உள்ள மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கடைகள் மற்றும் பள்ளிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காலை 10.36 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. 3.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து