முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷமி மோசமான பந்துவீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      விளையாட்டு
Mohammed-Shami 2023-11-03

Source: provided

ஒரே வீரருக்கு 2 விருதுகள்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் யார் யார் என்னென்ன பரிசுகள் பெற்றார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 2024-25 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (ஏப்.12) உடன் முடிவடைந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோகன் பகான் அணி 2-1 என பெங்களூருவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக மோகன் பகான் அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்தவருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்படுகிறது. சிறந்த வீரருக்கு தங்கப் பந்து விருதும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு விருதுகளும் இந்தமுறை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் அலாயெதீன் அஜாருக்கு வழங்கப்பட்டுள்ளன. மொராக்காவைச் சேர்ந்த இவர் நார்த் ஈஸ்ட் அணிக்காக பார்வேட் வீரராக விளையாடுகிறார்.

கம்பேக் தருவேன்: தீபக் சஹார்  

முன்னாள் சி.எஸ்.கே. வீரரான 32 வயதாகும் தீபக் சஹார் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 86 ஐ.பி.எல். போட்டிகளில் 81 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ப்ந்தினை ஸ்விங் செய்வதால் பவர்பிளேவில் அதிகமான விக்கெட்டுகளை எடுப்பதில் சிறந்தவராக இருக்கிறார். இந்நிலையில் தீபக் சஹார் பேசியதாவது: எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக காயம் ஏற்பட்டன. காயம் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது நடந்திருக்கிறது. என்னுடைய மனநிலை வித்தியாசமானது. நான் காயத்திலிருக்கும்போது வேறு ஒரு வீரர் விளையாடுவார். அதனால் நான் கம்பேக் கொடுக்க முடியாது என நம்பமாட்டேன். 

உங்களால் மீண்டும் திரும்ப வரமுடியாது என நினைத்தால் அதுதான் உங்களது மிகப்பெரிய பிரச்னை. நான் என்னைச் சந்தேகப்பட்டதே கிடையாது. இந்திய அணியில் எனது திறமை நன்றாக வெளிப்பட்டுள்ளது. நான் விளையாடும்போது எப்போதும் நல்ல நிலைமையிலேயே இருக்கிறேன். தொடர்ச்சியாக விளையாடும்போது நன்றாக விளையாடினால் மீண்டும் இந்திய அணியில் தேர்வாகுவேன். மனநிலைதான் மிகவும் முக்கியம். எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் நான் இந்திய அணியில் கம்பேக் தருவேன் என்றார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் மோதல்

நேற்று முன்தினம் இரவு (ஏப்.12) ஹைதராபாத் திடலில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 245 ரன்களை 18.3 ஓவர்களில் 247/2 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வீசிய 9ஆவது ஓவரில் 3,4-ஆவது பந்துகளில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் சிறப்பாக வீசியதால் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சாளரிடமே அடித்துவிடுவார். பந்தினைப் பிடித்த மேக்ஸ்வெல் வேண்டுமென்றே டிராவிஸ் ஹெட்டினை தாண்டி கீப்பரிடம் வேகமாக பந்தினை வீசுவார்.

இதனால் கோபமடைந்த டிராவிஸ் ஹெட் மேக்ஸ்வெல்லிடம் ஏதோ பேசுவார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 9ஆவது ஓவர் முடிவில் இருவரும் பேசும்போது பஞ்சாப் கிங்ஸின் மற்றுமொரு ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெல்லுக்கு ஆதரவாக டிராவிஸ் ஹெட்டிடம் வந்து பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆஸி. வீரர்கள் ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்துகொண்டது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் சஹால் ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷமி மோசமான பந்துவீச்சு  

ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது.  இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் இறுதியில் 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் கொடுத்தார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2வது வீரர் என்ற மோசமான சாதனையை ஷமி படைத்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து