முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட் பேட் அக்லி விமர்சனம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      சினிமா
Good-Bad-Ugly-Review 2024-0

Source: provided

ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது மகனுக்காக ’பேட்’ சுபாவத்தை விட்டுவிட்டு ’குட் ’-ஆக  மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். தண்டனை முடிந்து மகனை சந்திக்க செல்கிறார் அஜித்,  ஆனால் மகனோ பிரச்சனை ஒன்றில் சிக்கி சிறையில் இருக்கிறார். இதனால் மீண்டும்  ’பேட் ’அவதாரம் மட்டுமின்றி ’அக்லி’ அவதாரமும் எடுத்து, மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மாஸாக சொல்வதே ‘குட் பேட் அக்லி படக் கதை…. ரெட் டிராகன் மற்றும் ஏ.கே என்று அதிரடி காட்டியிருக்கும் அஜித் குமார், தனது ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார். அஜித்தின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா அருமையான நடிப்பை வெப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், ஜானி மற்றும் ஜாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். அஜித் ஒரு பக்கம் ஸ்டைலிஷாக மாஸ் காட்டினாலும், தனது மிரட்டலான நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி அருக்கிறார்ங அர்ஜூன்தாஸ். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் முழு படத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார், ஜி.வி.பிரகாஷின் இசையில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்ட விதம் ஆட்டம் போட வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்து மாபெரும் மாஸ் திருவிழா நடத்தியிருக்கிறார். இயக்குநராக அல்லாமல் அஜித்தின் ரசிகராக அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து