முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      இந்தியா      அரசியல்
congress-office

ஆமதாபாத், குஜராத் இடைத்தேர்தலில்  ஆம் ஆத்மியுடன் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 

குஜராத்தில் உள்ள விசாவதர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பயானி, ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க.வில் இணைந்ததும் இந்த தொகுதி காலியானது. இதேபோன்று, காதி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கர்சன் சொலான்கி பிப்ரவரி 4-ந்தேதி மரணம் அடைந்ததும் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கான போட்டியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் குஜராத் தலைவர் சக்திசின்ஹ் கோஹில் கூறும்போது, குஜராத்திகள் 3-வது அணிக்கு ஒருபோதும் வாக்களித்தது இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுக்கே வாக்களிப்பார்கள் என்றார். ஆம் ஆத்மி கடந்த தேர்தலில் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டும் 11 சதவீதம் அளவுக்கே வாக்குகளை பெற்றன. பா.ஜ.க.வை தோற்கடிக்க முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியே உள்ளது. அதனால், இரு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும் என கூறியுள்ளார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என அவர் கூறியபோதும், தேசிய அளவில் நாங்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் உள்ளோம் என கோஹில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து