முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.74 லட்சம் பட்டதாரிகள் எழுதிய சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
Teachers 2023 04 04

சென்னை, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வெழுதிய 1.74 லட்சம் பட்டதாரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு, 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி, நடப்பாண்டு சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38,451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 74,785 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு முடிவுகளை என்.டி.ஏ. நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணைய தளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம் என்று என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து