முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் கைது

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      சினிமா
Shine-Tom-2025-04-19

திருவனந்தபுரம், போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

ஹோட்டலில் நடந்த போதைப்பொருள் தடுப்புச் சோதனையின் போது, அங்கிருந்து தப்பிச் சென்றது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சாக்கோவுக்கு கொச்சி போலீஸார் நேற்று  முன்தினம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.

நோட்டீஸ் வழங்க நடிகரின் திருச்சூர் வீட்டுக்குப் போலீஸார் சென்ற போது, அவர் வீட்டில் இல்லாததால் அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் சாக்கோ, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலில் நடந்த சோதனையின் போது, நடிகர் தப்பிச் சென்றது ஏன் என்பது குறித்து கேட்டறிவதே விசாரணையின் நோக்கம் என்று போலீஸார் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.

முன்னதாக, மாவட்ட போதைப் பொருள் தடுப்பு அதிரடிபடை குழுவினர் புதன்கிழமை இரவு 10.45-க்கு போதைப் பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரைத் தேடி ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றனர். குற்றம்சாட்டப்பட்டவரை போலீஸாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும், ஹோட்டலின் பதிவேட்டில் நடிகர் சாக்கோவின் பெயர் இருப்பதை போலீஸார் பார்த்து, அங்கு அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்து நடிகர் தப்பிச் சென்றது தெரியவந்ததது.

போதைத் தடுப்புப்பிரிவு போலீஸார் ஹோட்டலுக்குள் நுழைந்ததும், நடிகர் அங்கிருந்து தப்பிச்செல்வது சி.சி.டிவி. காட்சியிலும் பதிவாகி உள்ளது. தப்பி ஓடுவது சாக்கோ தான் என்பதை போலீஸார் உறுதியும் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து