முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தொழில் முனைவோர், தொழில்களை ஊக்குவிக்க ஐந்து முக்கிய அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-2 2025-04-19

Source: provided

சென்னை : சென்னை குன்றத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் நேற்று கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பொன்னேரியில் நேற்று முன்தினம் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், குன்றத்தூரில் நேற்று தொழில்துறை சார்ந்த 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அது குறிது பேசிய அவர், தொழில்களை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோர்களுக்கு உதவுகின்ற வகையிலும், இந்த விழாவின் மூலமாக ஐந்து அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன் என்று அறிவித்தார்.

முதல் அறிவிப்பு

அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

2-வது அறிவிப்பு:

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

3-வது அறிவிப்பு:

தொழில் நிறுவனங்கள் மிகுதியாக இருக்கின்ற காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ஐந்து கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

4-வது அறிவிப்பு:

காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் மூன்று கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

5-வது அறிவிப்பு:

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படக்கூடிய காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு சார்பில், நாங்கள் வழங்குவது இந்த சிறு உதவி மட்டும்தான். அது மூலமாக உரம்பெற்று - உயர்ந்து - வளர்ந்து - நீங்களும் வாழ்ந்து - மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டிய கடமை உங்கள் கையில்தான் இருக்கிறது. தெய்வத்தான் ஆகாது எனினும்; முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிறார் வள்ளுவர். ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்பதை அனைவரும் உணர்ந்து உழைப்பைச் செலுத்துங்கள். உங்கள் தொழிலில் புதிய டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலை விரிவு செய்யுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் பகுதியையும் வளப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து