முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணியால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் சி.பி.எம். பொதுச் செயலாளர் பேபி கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1-2025-04-2025

சென்னை, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சி.பி.எம். பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பேபி கூறுகையில்,  மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு மக்களின் ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, மதவாத சக்திகளுக்கு கடும் பதிலடி கொடுக்க ஜனநாயக மதச்சார்பற்ற, முற்போக்கு அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழக மக்களை ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், அதை வலுவாக கட்டியெழுப்புவதில் தி.மு.க.வின் பங்களிப்பு குறித்தும் பேசினோம்.

தற்போது, பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன.  ஆர்.எஸ்.எஸ்-ன் வழிகாட்டுதலின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமை, ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு சீர்குலைத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். வக்பு திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது, சிறுபான்மையினர் உரிமைகள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணமாகும்.

அதேபோல்,  ஆளுநர்  விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பினை சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்றுதந்த முதல்வருக்கு வாழ்த்துகள். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாநில அரசுகளின் உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. பா.ஜ.க.-வுக்கும், அ.தி.மு.க.-வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால், மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும், வலுசேர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து