முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      உலகம்
Jelensky 2024 08 19

கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும், 19 தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி உள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "முதன்மைத் தளபதி சிர்ஸ்கியின் காலை 6 மணி அறிக்கையின்படி, பல்வேறு முன்னணி திசைகளில் இருந்த ஏற்கனவே ரஷ்யாவின் 59 குண்டுவீச்சுத் தாக்குதல்களும், அந்நாட்டுப் படை பிரிவுகளின் 5 தாக்குதல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டாரோபில்ஸ்க் செயல்பாட்டுக் குழுவும் ஒரு தாக்குதலை பதிவு செய்துள்ளது. டொனேட்ஸ்க் ஒடிஜி பிரிவில் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிரிகள் ஏராளமான எஃப்பிவி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குர்ஸ்கி பிராந்தியத்தில், ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது, தாக்குதலுக்கு ட்ரோன்களையும் பயன்படுத்தியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போர்ச் சூழலக்கு ஏற்ப உக்ரைன் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். உக்ரைன் தொடர்ந்து நடுநிலையாக நடந்து கொள்ளும். நேற்று மாலை 6 மணி முதல் நேற்று நள்ளிரவு வரை ரஷ்யா 387 குண்டுவீச்சு தாக்குதல்களையும், 19 தரைவழித்தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. ரஷ்யப் படைகளால் 290 முறை ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக ஈஸ்டர் நாளின் காலை நிலவரப்படி, போர்நிறுத்தம் என்ற ஒரு பொதுவான தோற்றத்தை ஏற்படுத்த ரஷ்யா முயற்சித்தாலும், இன்னும் உக்ரைனின் சில பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தும், தனிமைப்படுத்தும் தாக்குதல் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு ரஷ்யா முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். நேற்று நள்ளிரவில் இருந்து 30 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து அமல்படுத்த வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. களத்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப உக்ரைன் செயல்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து