முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      இந்தியா
Jammu-Rain-2025-04-20

ராம்பன், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை மொத்தம் 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இயற்கை சீற்றத்தால் 10 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன. மேலும், 23 முதல் 30 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்தது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தரம் குந்த் போலீஸார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காரணத்தால் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

ராம்பன் மாவட்டத்தில் நஷ்ரி முதல் பனிஹால் வரையிலான உள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரில் இரண்டு பேர் சகோதரர்கள் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழந்த மூவரும் செரி பாக்னா கிராமத்தை சேர்ந்தவர்கள்.

மேகவெடிப்பு காரணமாக அதீத மழை பொழிந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன் காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களில் ஜம்மு பகுதியில் பதிவான மழை காரணமாக மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திடீர் வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

250 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சிக்கித் தவிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பாதிப்பு குறித்து அறியவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இன்று மாலை அதிகாரிகள் அடங்கிய கூட்டம் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெறுகிறது. ராம்பன் மாவட்டம் மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீரின் இன்னும் பிற மாவட்டங்களில் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து