முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 வயது வீரர் குறித்து சுந்தர் பிச்சை கூறியது?

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sundar-Pichai 2024-02-16

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த இவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறினார். பலரும் இந்த இளம் வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில், “8-ஆவது படிக்கும் சிறுவனின் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பதற்காக எழுந்தேன்!!! என்ன ஒரு அறிமுகம்!” எனக் கூறியுள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை - ஐதராபாத் டிக்கெட்  இன்று விற்பனை தொடக்கம்

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை மகேந்திரசிங் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற   போட்டியில் சென்னை அணி , மும்பை அணியுடன் மோதியது. தொடர்ந்து வரும் 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி , ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், சென்னை -  ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை காலை 10:15க்கு ஆன்லைனில் தொடங்குகிறது.

கொல்கத்தா அணியில்  இணைந்த அபிஷேக் நாயர்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் அபிஷேக் நாயர் நீக்கம் குறித்து பி.சி.சி.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர், ஐ.பி.எல். தொடரில் கே.கே.ஆர். (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

அபிஷேக் நாயர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். 8 மாதங்களிலேயே அவர், நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி பட்டம் வென்ற போது அபிஷேக் நாயர், துணை பயிற்சியாளராகவும், ஆலோசகராவும் பணியாற்றியிருந்தார். மேலும் கே.கே.ஆர். அகாடமியிலும் வீரர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

ஆர்.சி.பி. அணியில் இருந்து  லிவிங்ஸ்டன் அதிரடி நீக்கம்

ஐ.பி.எல். 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி., பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆர்.சி.பி. அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரோமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இதில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்லும். 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளஆர்.சி.பி. இந்தப் போட்டியில் அபாரமாக வென்றால் முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

ஐதராபாத் மைதானத்தில்  அசாருதீனின் பெயர் நீக்கம்

ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார் 'வி.வி.எஸ். லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது. இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். 

சூர்யவன்ஷியை பாராட்டிய  லக்னோ அணி உரிமையாளர்

ஐ.பி.எல். தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36-வது லீக் போட்டியில்   முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.

 

மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து