முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      இந்தியா
congress-office

புதுடில்லி, அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

புதுடில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்  அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 25 முதல் மே 30 ஆம் தேதிவரையில் நாடுதழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசியதாவது, அரசியலமைப்பைக் காப்பாற்றும் போராட்டம்  வீட்டுக்குவீடு பிரசாரமும் நடத்தப்படும். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகத்தை மத்திய பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது, அரசியல் பழிவாங்கும் வழக்கே.  

நேஷனல் ஹெரால்டு பற்றிய பா.ஜ.க.வின் தவறான தகவலை எதிர்கொள்ளும்வகையில், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில், தற்போது சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து