எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் மாநில சுயாட்சியை பெறுவோம், கூட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம் என்று கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழாவில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்புமிக்க தீர்ப்பு...
சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் டாக்டர் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பாராளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
எல்லையில்லா மகிழ்ச்சி...
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டி எல்லையில்லாத மகிழ்ச்சியோடு நாமெல்லாம் கூடியிருக்கிறோம்.
தீர்ப்பு மகத்தான வெற்றி...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை - கவர்னர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும் - மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி.
மாபெரும் விடுதலை....
அரசியல் சாசன பிரிவு 142-ன் கீழ் சுப்ரீம் கோர்ட்டிற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு வணக்கம் செலுத்தியது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.
அரசின் பாராட்டுகள்..
இந்த அரசியல் உரிமையை - சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்களால் இந்த விழாவிற்கு வர இயலவில்லை. அவர் இங்கு இல்லையென்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களாட்சிக்கு வெற்றி...
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் - அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோரை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன். அறிவிற்சிறந்த வழக்கறிஞர் பெருமக்களே..... உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள்-அமைப்புகள் ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து மாநில மக்களுக்கும், மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி.
மாநில சுயாட்சி....
இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் - வாதிட்ட நீங்களும் - தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி. இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, பேரறிஞர் அண்ணா வலியுறுத்தி, தலைவர் கலைஞர் முழக்கமாக வடித்து கொடுத்ததுதான் மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியைப் பெறுவோம். கூட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: தமிழக அரசாணை வெளியீடு
27 Apr 2025சென்னை : ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் : பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் பேச்சு
27 Apr 2025லாகூர் : கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார்.
-
இந்தியா உடனான வர்த்தக முறிவு எதிரொலி: மருந்து பொருட்களுக்கு பாகிஸ்தானில் தட்டுப்பாடு?
27 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளி
-
மாற்று பணி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
27 Apr 2025சென்னை : மாற்றுப் பணி உத்தரவு பெற்று, வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனே அங்கிருந்து விடுவித்து அவரவர் பள்ளிகளுக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2025
27 Apr 2025 -
பஹல்காம் தாக்குதல் வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்
27 Apr 2025புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) எடுத்
-
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
27 Apr 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழக அரசு உத்தரவு
27 Apr 2025சென்னை : எம்-சாண்டு மணல், ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1000- குறைத்து விற்பனை செய்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு தற்போது குறைவு : காவல் ஆணையர் அருண் தகவல்
27 Apr 2025சென்னை : போக்குவரத்து போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
-
விஜய் பேச்சு தி.மு.க.வின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்
27 Apr 2025தஞ்சாவூர் : விஜய்யின் பேச்சு தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு நிறைவு
27 Apr 2025புதுடெல்லி : இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
கோவையில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
27 Apr 2025கோவை : கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே
-
மாணவர்களை வெயிலில் செல்ல பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் : தமிழக கல்வித்துறை வேண்டுகோள்
27 Apr 2025சென்னை : மாணவர்களை வெயிலில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
புதின் மீது டிரம்ப் அதிருப்தி: உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த தயார் நிலையில் ரஷ்யா..!
27 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் அணியில் வி.சி.க. ஒருபோதும் இடம்பெறாது : திருமாவளவன் திட்டவட்டம்
27 Apr 2025புதுச்சேரி : பா.ஜ.க.வும், பா.ம.க.வும் இருக்கும் அணியில் வி.சி.க. இடம்பெறாது என்று அதன் தலைவர் தொல் திருமாளவளவன் தெரிவித்துள்ளார்.
-
பாக்.கில் 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
27 Apr 2025லாகூர் : ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள் - வீதிகள்
27 Apr 2025ஸ்ரீநகர், : பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.
-
இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து வேதனை தெரிவித்த சூர்யா..!
27 Apr 2025ஐதராபாத் : இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல்: பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் தொலைபேசியில் உரையாடல்
27 Apr 2025புதுடில்லி : பஹல்காம் தாக்குதல்: பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் அதிபர் தனது ஆதரவை தெரிவித்தார்.
-
கனடா நாட்டில் பயங்கரம்: வீதியில் கூடிய கூட்டத்தின் மீது மோதிய கார் - பலர் உயிரிழப்பு
27 Apr 2025ஒட்டோவா : கனடாவின் வான்கூவரில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழா ஒன்றில் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸார்
-
வக்பு நிலங்களில் வளர்ச்சி பணிகள்: தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி
27 Apr 2025ராமேசுவரம் : வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவி
-
டெல்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்: காவல்துறைக்கு உளவுத்துறை பட்டியல்
27 Apr 2025புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உள
-
கலப்பின கஞ்சாவுடன் மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேர் கைது
27 Apr 2025கொச்சி : கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரான் துறைமுக வெடிவிபத்து உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு
27 Apr 2025தெஹ்ரான் : ஈரான் நாட்டில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்.26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்
-
பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்து கேரள முதல்வர் ஆறுதல்
27 Apr 2025கொச்சி : கொச்சியில் பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.