முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: அமைச்சர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      சினிமா
Ma Subramani-2023-11-09

சென்னை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி அஸ்விணிக்கு ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கடந்த 3-ம் தேதி அன்று இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் இதய துவார அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள். சென்னை, மேடவாக்கம் பகுதியைச் சார்ந்த அஸ்வினி என்கின்ற 16 வயது மாணவி தற்போது ஆலந்தூர் பகுதியில் வசித்து கொண்டிருக்கிறார். அவருக்கு இருதயத்தில் இருந்த துவாரத்தை ரோபோட்டிக் உதவியுடன் இன்றைக்கு வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறார்கள். 

இந்த அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும். அந்த சிகிச்சைக்கு பிறகு பெரிய அளவிலான தழும்பு உடல் மறைகின்ற வகையில் இருக்கும். எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மிகச் சிறிய தழும்போடு இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. 

ஒன்றிய, மாநில அரசு மருத்துவத்துறை வரலாற்றிலேயே வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. 100 புற்றுநோய் நோயாளிகளுக்கும், 60-க்கும் மேற்பட்ட இதய நோயாளிகளுக்கும் ரோபோட் உதவியுடனான அறுவை சிகிச்சையால்  செய்யப்பட்டுள்ள இந்த கருவியின் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமே இந்திய வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த சாதனையை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். அந்தவகையில் அன்புத்தங்கை அஸ்வினி என்பவர் இந்த சிகிச்சையின் மூலம் பயன்பெற்று நலமுடன் இருக்கிறார், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு மருத்துவத்துறையின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து