முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்: காவல்துறைக்கு உளவுத்துறை பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      இந்தியா
Pak-1 2025-04-26

Source: provided

புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உளவுத்துறை (ஐ.பி.) ஒப்படைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆர்ஆர்ஒ), பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருடன் பகிர்ந்து கொண்டது. அடையாளங்களைச் சரிபாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நீண்ட காலம் விசா அனுமதி வைத்திருக்கும், இந்து பாகிஸ்தானியர்களின் பெயர்களும் அடங்கும்.

டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களை விரைவில் இந்தியாவை விட்டு வெளியறேச் சொல்லும் பொறுப்பு டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏப்.27ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மருத்துவம், ராஜாங்க மற்றும் நீண்டகால விசாக்கள் வைத்திருப்பவர்களைத் தவிர பிற பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது தொடர்பாக வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. மருத்துவ விசாக்களும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து