முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா நாட்டில் பயங்கரம்: வீதியில் கூடிய கூட்டத்தின் மீது மோதிய கார் - பலர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      உலகம்
Canada 2025-04-27

Source: provided

ஒட்டோவா : கனடாவின் வான்கூவரில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழா ஒன்றில் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வான்கூவர் போலீஸார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சனிக்கிழமை இரவு 8 மணிக்கு இ.41-வது அவென்யூவில் நடந்த விழா ஒன்றில் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் சிலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரிவிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருந்தபோதிலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில் தெரு முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது. கூட்டத்தினர் மீது மோதியதாக கூறப்படும் கருப்பு எஸ்யூவி கார் ஒன்று நொறுங்கிய நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் நீலநிற லாரிக்கு அருகில் நிற்பதைக் காண முடிகிறது.

வேறு சில வீடியோக்களில் காயமடைந்தவர்களுக்கு பிறர் உதவி செய்வதையும் பலர் கதறுவதையும் காணமுடிகிறது. பிலிப்பினோ பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழாவைக் கொண்டாடும் லாபு லாபு தின விழாவில் நடந்த இந்த துயரச் சம்பவம் குறித்து வான்கூவர் மேயர் கென் சிம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து