முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேங்கர்ஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      சினிமா
Kangers 2025-04-28

Source: provided

ஊர் தலைவர்களாக உள்ள மைம் கோபி அருள்தாஸ் சகோதரர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது செயல்களால் பள்ளியும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவிகள் சிலர் மாயமாகும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், அங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து பள்ளி ஆசிரியை கேத்ரின் தெரசா போலிசில் புகார் செய்கிறார். அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை அனுப்புகிறது. அதன்படி, உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக சேரும் சுந்தர்.சி, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வில்லன் கோஷ்டியை வதம் செய்கிறார். எனவே அவர் தான் அந்த ரகசிய காவல்துறை அதிகாரி என்று நாயகி கேத்ரின் நினைத்துக் கொள்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் சுந்தர்.சி அந்த காவல்துறை அதிகாரி இல்லை, என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படி என்றால் சுந்தர்.சி யார்? அவர் எதற்காக வில்லன் கோஷ்டியை வதம் செய்கிறார் என்பதை சிரிப்பு சரவெடியாக சொல்வதே ‘கேங்கர்ஸ்’. ஹீரோவாக மீண்டும் களம் காணும் சுந்தர்.சி, துணைக்கு வடிவேலுவை சேர்த்துக் கொண்டு தங்களது கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஹீரோவுக்கான காதல் காட்சிகளை தவிர்த்திருக்கும் சுந்தர்.சி, ஆக்‌ஷன் மற்றும் காமெடியில் பின்னியிருக்கிறார். 

உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் வடிவேலு, நகைச்சுவை புயலாக மீண்டும் மையம் கொண்டு மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். வசனங்கள், உடல் மொழி என்று மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருக்கும் வடிவேலு, தான் எதிர்கொண்ட பந்துகள் அனைத்தையும் பவுண்டரியாக மாற்றி வெற்றி பெற்றுள்ளார். நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா, நடிப்பு, காதல், கவர்ச்சி அனைத்திலும் அசராமல் நடித்திருக்கிறார்.

பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு என அனைவரும் ஒன்று சேர்ந்து காமெடி கேங்கர்ஸாக மாறி படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள். 

சத்யாவின் இசை ஒகே ரகம். ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

வெங்கட் ராகவனின் திரைக்கதை மற்றும் வசனம் காமெடி காட்சிகளுக்கான சத்துமிக்க உரமாக அமைந்திருப்பதோடு, பல திருப்பங்கள் மூலம் படத்தை சுவாரஸ்யமாகவும் நகர்த்திச் செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, தனது வழக்கமான பாணியில் கதையை நகர்த்திச் சென்றாலும், காட்சிக்கு காட்சி சிரிக்க வைப்பதோடு, பார்வையாளர்களின் யூகங்களை உடைத்து புதிய ரூட்டில் திரைக்கதையை பயணப்பட வைத்து படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறார்.

 மொத்தத்தில், சிரிக்காதவர்களையும் சிரிக்க வைக்கிறார்கள் இந்த கேங்கர்ஸ் டீம்…

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து