முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.டி.டி.யில் ஆபாசப் படங்கள்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

புதுடில்லி, ஆபாசப் படங்கள், இணையத் தொடர்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.டி.டி. நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஓ.டி.டி. மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆபாச திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக ஊடகங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், அதுதொடர்பான முழுப் பட்டியலும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இதுபோன்ற காட்சிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. இதனைத் தடுக்க சில விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும் சில பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, அமேசான் ப்ரைன், நெட் பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓ.டி.டி. நிறுவனங்களுக்கும், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து