முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வயிற்றுப்போக்கு, பேதி, இரத்த பேதி சரியாக சித்த மருத்துவ குறிப்புக்கள் | Diarrhoea

  1. கழிச்சல் குணமாக ;-- மாங்கொட்டை பருப்பு,மாதுளம்பூ ,ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட வேண்டும்.
  2. சுக பேதியாக ;-- நுனாவேரை கஷாயமாக்கி குடிக்கவும்.
  3. சீதபேதி குணமாக ;--  புளியங்கொட்டை தோலையும்,மாதுளம் பழத்தோலையும் பொடி செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்.
  4. பேதி குணமாக ;-- அவரை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
  5. தொடர் வயிற்றுப்போக்கு ;-- பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
  6. காலரா குணமாக ;-- மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்.
  7. பேதி நிற்க ;-- கொய்யா வேரை கொதிக்க வைத்து காலையில் கொடுக்கலாம்.
  8. சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள் ;-- ஆளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம்.
  9. இரத்த பேதி தீர ;-- இலந்தைபட்டையை கஷாயம் செய்து குடிக்கலாம்.
  10. மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க ;-- மாதுளம்பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  11. சீதபேதி குணமாக ;-- நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிடலாம்.
  12. மேகம்,வயிற்றுப்போக்கு தீர ;-- நீர்முள்ளி விதையை பொடிசெய்து ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  13. வயிற்றுப்போக்கு குணமாக ;--  மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லா வகை வயிற்றுப்போக்கும் தீரும்.
  14. குமட்டல்,வயிற்றுப்போக்கு தீர ;-- எலுமிச்சம்பழ சாறில் சீரகத்தை ஊறவைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிடலாம்.
  15. பேதி;-- வேப்பிலை,வசம்பு கஷாயம் குடிக்கலாம்.
  16. உஷ்ணபேதி குணமாக;-- உலர்ந்த மாம்பூ,சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்.
  17. சீத பேதி,இரத்தபேதி குணமாக;-- அசோகுப்பூ,மாம்பருப்பு சம அளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில் உட் கொள்ளலாம்.
  18. வாந்தி,பேதி அடங்க ;-- கொய்யா இலையை காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்கலாம்.
  19. இரத்தபேதி நிற்க ;-- இலந்தை பட்டையை கஷாயம் செய்து குடிக்கலாம்.
  20. இரத்த கழிச்சல் தீர ;-- கட்டு கொடி இலை சாறை சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
  21. இரத்த போக்கு நிற்க ;-- நெய்யுடன் செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர உடனே நீற்கும்.
  22. இரத்தம்  சரியாக ;-- ஆடாதொடை இலை சாறை தேன் கலந்து சாப்பிட சரியாகும்.
  23. இரத்தம் தூய்மையாகி மேகரேகை கிருமிகள் நீங்க ;--  கருஞ்செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago