முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. உள்பட 5 மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை,மார்.- 5 - சட்டசபை தேர்தல் முடிந்த உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஓட்டு எண்ணப்படும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவை, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மணிப்பூர், உத்தரகாண்ட்,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. பின்னர் அந்த தேதி மாற்றப்பட்டு பிப்ரவரி 8-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 11-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து 3,4,5,6, ஆகிய கட்ட தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதே நாளில் கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏறக்குறைய 7 கட்ட தேர்தலும் மிகவும் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தீவிரவாதிகள் ஒரு சில இடங்களில் குண்டுவீச்சு போன்ற கலவரத்தில் ஈடுபட்டனர். மற்றபடி இதர 4 மாநிலங்களிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற இந்த 5 மாநிலங்களிலும் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஓட்டுக்கள் எண்ணப்படும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்தல் கருத்து கணிப்பில் பஞ்சாப்,உத்திரப்பிரதேச மாநிலங்களில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி தலையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் முலாயாம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சிக்கு 210 தொகுதியும் அதனையடுத்து பகுஜன்சமாஜ், பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்