முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியஅரசுக்கு ஆதரவா வாபஸ்பெறுங்கள் மம்தா, பவாருக்கு கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, செப்.- 17- மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுங்கள் என்று மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோருக்கு சிவ சேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தியதற்கும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே சிவ சேனா கட்சி சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிவ சேனா கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சிவ சேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். மக்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்தி வரும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண் துறை அமைச்சருமான சரத் பவார், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எரி பொருள் விலைகளை தொடர்ந்து உயர்த்தி கொண்டே போகும் மத்திய ரசை பார்த்து நாம் சகித்துக்கொண்டிருக்கக்க வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை மக்களே விரட்டியடிக்கும் நேரம் இப்போது வந்து விட்டது என்றும் அவர் கூறினார். சிவாஜி பூங்காவிலிருந்து சித்தி விநாயகர் கோவில் வரை சிவ சேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தலைமையில் மாபெரும் சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்