முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படத் தயாரிப்பாளர்களுக்கு கவர்னர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.2 - மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்ளது உணர்வுகள் புண்படாத வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக கவர்னர் தமது உரையில் கூறியிருக்கிறார்.

விஸ்வரூபம் படப்பிரச்சனை எழுந்துள்ள நிலையில் அவர் இத்தகைய அறிவுரையை கூறியி ருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது உரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

முதல்வரின் உறுதியான, தீர்க்கமான முடிவின் காரணமாக உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய `டேம் 999', போன்ற திரைப்படங்கள் உரிய தருணத்தில் தடைசெய்யப்பட்டதால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் மாநிலத்தில் எழாமல் தயாரிக்கும்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய உணர்வுகள் புண்படாதவகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஒன்றை அரசு விரைவில் ஏற்படுத்தும். அரசின் நலத்திட்ட உதவிகளை நேரிடையாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கு இந்த தகவல் தொகுப்பு மையம் பயன்படுத்தப்படும்.

அரசின் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை தயாரித்தல் ஒப்பந்தப் புள்ளிகளை பெற்று  முடிவு செய்தல், பணிகளை செயல்முறை படுத்துதல் அளவீடு செய்தல் இவற்றுடன் இறுதியாக பணம் வழங்குதல் வரையிலான அனைத்து நிலை பணிகளையும் கணினி மையமாக்கி ஒருங்கிணைக்கக்கூடிய வகையில் ஒட்டுமொத்த திட்ட வடிவமைப்பு, செயலாக்கம், மேலாண்மை முறையை வகுத்து அரசு செயல்படுத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்