முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: இன்று இத்தாலி விரைகிறது சி.பி.ஐ. குழு

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 18 - நாட்டின் அதி முக்கியத் தலைவர்களுக்காக ஹெலிகாப்டர்களை வாங்கியதில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான சர்ச்சையில், 3 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இத்தாலி விரைகிறது. இந்தக் குழுவுடன், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவரும் செல்கிறார். 

இந்தக் குழுவினர் மிலன் நகருக்குச் செல்கிறார்கள். அங்கு கைமாறிய பணம் மற்றும் ஊழல் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையை மேற்கொள்கிறார்கள். பல்வேறு தகவல்களையும் திரட்டவுள்ளனர். இன்று இக்குழு இத்தாலி செல்கிறது. வி.வி.ஐ.பி. களுக்காக ரூ. 3600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம். இதுகுறித்து தற்போது நேரடியாக இத்தாலிக்கு சென்று விசாரணை நடத்தவுள்ளது சி.பி.ஐ. இத்தாலிய விசாரணை அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சந்தித்து தகவல் சேகரிக்கவுள்ளது. யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்