தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

400 பெட்ரோல் பங்க்குகளை மூட ஐகோர்ட்டில் வழக்கு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 -  தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் தடையில்லா சான்றிதழ் பெறாத சுமார் 400 பெட்ரோல் பங்க்குகளை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 400 பெட்ரோல் பங்க்கின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி சென்னை  தி.நகரை சேர்ந்த சி.ஆர்.பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 400 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாமல் செயல்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2006-ம் ஆணடு தொடக்கத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் தடையில்லா சான்றிதழ் பெறாமல் இயங்கும் பெட்ரோல் பங்குகளை மூடும்படி வலியுறுத்தி இருந்தது.

ஆனால் இதுவரை அந்த பெட்ரோல் பங்குகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற பெட்ரோல் பங்குகள் உரிமத்தை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசுக்கு மனு செய்திருந்தேன் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை எனவே இது போன்று செயல்படும் பெட்ரோல் பங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் இந்த மனுவுக்கு நான்கு வாரகாலத்திற்குள் பதில்அளிக்கும்படி மத்திய மாநில, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago