முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக எம்.பி. தொகுதி இடை தேர்தலில் ரம்யா வெற்றி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 25 - கர்நாடகத்தில் பெங்களூர் ஊரகம் மற்றும் மண்டியா ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இரு தொகுதியிலும்  காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. நடிகை ரம்யா வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

பெங்களூர் ஊரகம் மற்றும் மண்டியா ஆகிய இரு மக்களவை  தொகுதிகளுக்கு கடந்த 21 ம் தேதி தேர்தல் நடந்தது. பெங்களூர் ஊரகம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டி.கே.சுரேஷ், மதச்சார்பற்றி ஜனதா  தளம் (ம.ஜ.த) வேட்பாளராக அனிதா குமாரசாமி உள்பட 13 பேர் போட்டியிட்டனர். மண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா, ம.ஜ.த  வேட்பாளராக புட்டராஜு உள்பட 9 பேர் போட்டியிட்டனர். இரு தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெங்களூர் ஊரக  தொகுதி வாக்கு எண்ணிக்கை ராம் நகரில் உள்ள கவுசியா இன்ஜினியிரிங் கல்லூரியிலும், மண்டியா தொகுதி வாக்கு எண்ணிக்கை மண்டியா நகரில்  உள்ள அரசு உயர்நிலை பள்ளியிலும் நடந்து வருகிறது. இரு மக்களவை தொகுதியிலும் தலா 8 சட்டபேரவை தொகுதிகள் அடங்கியுள்ளதால், ஒரு  தொகுதிக்கு 14 மேஜைகள் என மொத்தம் 112 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இரு தொகுதியிலும் இதுவரை நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. அதில் பெங்களூர் ஊரக தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக  போட்டிட்ட டி.கே. சுரேஷ், 70 ஆயிரம் வாக்கு வித்யாசத்திலும், மண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரம்யா, 35 ஆயிரம் வாக்குகள்  வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இரு தொகுதியிலும் மஜத வேட்பாளர்கள் பின் தங்கி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில்  இருப்பதால், அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாட தொடங்கியுள்ளனர். 

பெங்களூர் ஊரக தொகுதியில் குமாரசாமி, மண்டியாவில் என்.செல்வராயசாமி எம்.பிக்களாக இருந்தனர். சட்டபேரவை தேர்தலில் இவர்கள் வெற்றி  பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்கள். இதையடுத்து இடைத்தேர்தல் நடந்தது. இந்த 2 தொகுதிகளையும் தற்போது ம.ஜ.தா.விடமிருந்து  ஆளும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்