முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்: நவாஷ்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப்.19 - காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றம் கவலையளிப்பதாக உள்ளது. அதைத் தணிப்பதற்கான செயல்பாடுகளை பொறுப்புடன் பாகிஸ்தான் அணுகும் என்றார். 

    தற்போது துருக்கி நாட்டுக்கு 3 நாள் அரசுப் பயணம் மேற்கொண்ட அவர் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

பாகிஸ்தான் அரசு ஒரு நிலையான நீடித்த வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளது. குறிப்பாக அண்டை நாடுகள் உள்பட அனைத்து நாடுகளுடனும்  கூட்டுறவான ஒத்துழைப்பையே வலியுறுத்தி வருகிறது. எங்கள் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அண்டை நாடுகளுடனான நல்லுறவு முக்கியம் என்பதால் அதற்கு எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.  காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தீர்க்கமான பேச்சு வார்த்தையை விரும்புகிறோம். 1999-ல் அப்போது பிரதமராக இருந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்குப் பயணம் வந்தபோது காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் நெருங்கி வந்தன என்றார்.

இதற்கிடையே இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் நடந்து வருகிறது. இதுகுறித்து இந்தியாவுடன் நீடித்த  ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை தேவை என்று அவர் கூறியதாக அந்நாட்டு ரேடியே தெரிவித்தது. பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் குறித்து நவாஸ் ஷெரீப் கூறுகை.யில் தலிபான்கள் பயங்கரவாதத்தை  கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்.  எங்களின் எச்சரிக்கையை மீறி அவர்கள் செயல்படும்போது,  அப்பாவி மக்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.  இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குக்  காரணம் கடந்த காலங்களில் தவறான கொள்கைகள் பின்பற்றப்பட்டதே காரணம் ஆகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago