முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் 20-ம் தேதி ரஷ்யா - சீனாவுக்கு முக்கிய பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.7 பிரதமர் மன்மோகன் சிங் வருகின்ற 20_ம் தேதி முக்கிய பயணமாக ரஷ்யா,சீனா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது அணுசக்தி,வர்த்தகம் உள்பத பல்துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

முதல் கட்டமாக ரஷ்யா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு 3 நாள் நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புட்டினை சந்தித்து பேசுகிறார். மேலும் இந்தியா_ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ரஷ்யாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி ஆகிய துறைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். ரஷ்ய அதிபர் புட்டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அணுசக்தி விபத்து இழப்பீடு மற்றும் இந்தியாவில் ரஷ்யர்கள் முதலீடு செய்திருப்பதற்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளிப்பார் என்று தெரிகிறது. இருநாடுகளின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சமீபத்தில் மாஸ்கோவில் நடைபெற்றது. அப்போது கூடங்குளத்தில் அமைக்கவிருக்கும் 3 மற்றும் 4_வது பிரிவுக்கு அணுஉலை வழங்குவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் பிரதமர் பயணத்தின் போது கூடங்குளத்தில் அமைக்கவிருக்கும் 3 மற்றும் 4_வது யூனிட் தொடர்பாக தொழில்நுட்பம் வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தெரிகிறது. இந்தியாவின் 2010_ம் ஆண்டு அணுசக்தி விபத்து நஷ்டஈடு சட்டத்தை சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு சட்டத்திற்கு ஒத்துப்போகுமாறு செய்யவும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணப்படும் என்று தெரிகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 22_ம் தேதி சீனாவுக்கு செல்கிறார். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள எல்லைப்பிரச்சினை, நதிநீரை திருப்பி விடுவது தொடர்பாக பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் வர்த்தகம், தொழில் தொடர்பாகவும் இருநாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்படலாம் என்று தெரிகிறது. இருநாடுகளிடையே வர்த்தகத்தில் பாரபட்சம் உள்ளது. சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்தியாவில் இருந்து சீனா இறக்குமதி செய்வதில்லை. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. எல்லையில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவல் செய்து வருகிறது. இது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்