முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெண்டுல்கருக்கு கவர்னர் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 20 - பாரத ரத்னா விருது பெறும் தெண்டுல்கருக்கு தமிழக கவர்னர் ரோசையா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:_

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெறும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

இந்தியாவுக்கும், கிரிக்கொட்டுக்கும் நீங்கள் புகழ் சேர்த்துள்ளீர்கள். உங்களது ஓய்வு மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறையினர் உங்களை பின்பற்றும் வகையில் சிறந்த பாதையை அமைத்துள்ளீர்கள்.இந்திய கிரிக்கெட்டில் மேலும் பல்வேறு சச்சினை உருவாக்க நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பயிற்சி கொடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பு மேலும் பல ஆண்டுகள் இருந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாகவும். ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துதுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்