முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 2,400 கசையடி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், பிப். 25 - சௌதி அரேபியாவில் தாயின் பல்லை  உடைத்த மகனுக்கு 5 ஆண்டு சிறையும், 2,400 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது. 

இது குறித்து சௌதி அரேபியாவில் இருந்து வெளிவரும் ஓகாஜ் நாளிதழ் வெளியி ட்டிருக்கும் செய்தி வருமாறு 

சௌதி அரேபியாவில் தனது தாயுடன் காரில் சென்ற 30 வயது இளைஞர் தாயுடன் ஏற்பட்ட தகராறில் தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கினார். 

இதில் தாயின் பல் உடைந்தது. சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகனைக் கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2,400 கசையடியும் வழங்கித் தீர்ப்பளித்தது. 

மேலும் 2,400 கசையடிகளை பத்து நாள்களுக்கு ஒரு முறை பொது இடத்தில் வைத்து 40 கசையடிகளாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இவை தவிர தாயின் பல்லை உடைத்ததற்காக மகனின் பல்லை உடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்