முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கப்பல் படை கப்பலில் வாயு கசிவு: கமாண்டர் பலி

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2014      தமிழகம்
Image Unavailable

 

மும்பை,மார்ச்.8 - இந்திய கப்பல் படைக்கு சொந்தமான கப்பலில் நேற்று திடீரென்று கார்பன்-டை ஆக்ஸைடு கசிவு ஏற்பட்டதில் கப்பல் கமாண்டர் ஒருவர் பலியானார் மற்றும் கப்பலில் இருந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய கப்பல் படைக்கு சொந்தமான கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதும் சேதம் அடைவதுமாகவும் இருக்கின்றன. கடந்த 7 மாதங்களில் 12 கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. மஜகான் கப்பல் கட்டும் தனியார் நிறுவனம் கட்டிய ஐஎன்எஸ் ரக போர் கப்பல் ஒன்று மும்பை கடற்படை கப்பல் துறைமுகத்தில் இருந்து நேற்று சோதனை ஓட்டம் பார்ப்பதற்காக இயக்கப்பட்டது. இந்த கப்பலை பல கமாண்டர்களும் மஜகான் கம்பெனி அதிகாரிகள் பலரும் அந்த கப்பலில் சென்றனர். கப்பலானது கடலில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் இருக்கும் டாங்கரில் நிரப்பப்பட்டிருந்த கார்பன் டை ஆக்ஸைடு வாயு கசிந்தது. இந்த வாயு அடைக்கப்பட்டிருந்த டாங்கரில் ஓட்டை ஏற்பட்டதால் வாயு கசிவு ஏற்பட்டது. இதை தெரியாமல் சுவாசித்த கப்பல் கமாண்டர் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது மேலும் அந்த கப்பலில் சென்ற மஜகான் நிறுவன அதிகாரிகள் பலரும் வாயு தாக்கியதில் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய கப்பல் படையில் உள்ள கப்பல்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 12 கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஐஎன்எஸ். சிந்துக்கஷா கப்பல் விபத்துதான் பெரிய விபத்தாகும். இந்த கப்பல் விபத்தில் கப்பலில் இருந்த 14 ஊழியர்கள் பலியானார்கள். இந்த மாதம் ஆரம்பத்தில் ஐஎன்எஸ் ஐராவத் என்ற பெரிய போர் கப்பல் லேசான விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஐஎன்எஸ். பெத்வா என்ற கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது மோதி விபத்துக்குள்ளானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago