முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தடகள சாம்பியன்ஷிப் இந்திய வீராங்கனை மயூக்கா ஜானி இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

டெகு, ஆக. - 29  - தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நீளம் தாண்டும் பிரிவில் இந்திய வீராங்கனை மயூக்கா ஜானி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இது பற்றிய விபரம் வரு மாறு -  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவில் உள்ள டெகு நகரில் நேற்று முன் தினம் கோலாகலமாக துவங்கியது. இத ற்காக அந்த நாடு பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது.  இதில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன் னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்ற களத்தில் குதித்துள்ளனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சியுடன் வந்து உள்ளனர். துவக்க நாளன்று கென்யாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது. பெண் களுக்கான மராத்தான், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தங் கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களையும் கென் யா பெற்றது.  மகளிருக்கான நீளம் தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனை மயூக்கா ஜானி பங்கேற்றார். ஆசிய சாம்பியனான அவர் நேற்று நடந்த தகுதி சுற்றில் சிறப்பாக தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த 2-வது இந்திய வீராங்கனை மயூக்கா ஜானி ஆவார். இதற்கு முன்பு அஞ்சு ஜார்ஜ் தகுதி பெற்று இருந்தார்.
மயூக்காவிற்கு இறுதிச் சுற்று மிகுந்த சவாலாக இருக்கும் என்பதில் சந் தேகம் இல்லை. நேற்று காலை நடந்த ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் ரஷ்யாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
அந்த நாட்டைச் சேர்ந்த வாலொலி போர்ச்சின் ஒரு மணி 19.50 நிமிட த்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதே போல, வெள்ளிப் பதக்கமும் ரஷ்யாவுக்கு கிடைத்தது.
அந்த நாட்டைச் சேர்ந்த விளாடிமிர் பந்தய தூரத்தை ஒரு மணி மற்றும் 20.27 நிமிடத்தில் கடந்தார். கொலம்பிய வீரர் லோபஸ் ஒரு மணி 20.30 நிமிடத்தில் இந்த தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்