முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி நிலையத்துடன் சோயுஸ் விண்கலம் இணைந்தது

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, நவ.17 - ரஷ்யா விண்ணுக்கு அனுப்பிய சோயுஸ் விண்கலம் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் ஒன்றாக இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே  நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த விண்வெளி நிலையம் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அவ்வப்போது இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.மேலும் இந்த நிலையத்திற்கு தேவையான பொருட்களும் அவ்வப்போது பூமியில் இருந்து விண்கலங்கள் மூலம் அங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

ரஷ்யா சில தினங்களுக்கு முன்பு சோயுஸ் என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் கஜகஸ்தானில் உள்ள பைகானூன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் ரஷ்யாவின் ஆன்டன் ஸ்காப்லெரோவ், யுவானிசின் ஆகியோரும், அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் டேனியல் புர்பேங் ஆகியோர் இந்த சோயுஷ் விண்கலத்தில் சென்றுள்ளனர். இந்த சோயுஸ் விண்கலம் திட்டமிட்டபடி நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இந்த விண்கலத்தில் சென்ற 3 வீரர்களும் விண்வெளி நிலையத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கியிருப்பார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி ஓல்கோவ், அமெரிக்காரின் நாசா விண்வெளி வீரர் மைக் போஸும், ஜப்பான் விண்வெளி வீரர் சட்டோஷி புர்காவா ஆகியோர் இந்த சோயுஸ் விண்கலத்தில் பூமிக்கு வருகிற 22 ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள். சோயுஸ் விண்கலத்தில் தற்போது சென்றுள்ள 3 வீரர்களும் 124 நாட்களுக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். அப்போது இவர்கள் 37 விதமான அறிவியல் ஆய்வுகளை நடத்துவார்கள். அப்போது அந்தரத்தில் மிதந்தபடி விண்நடையும் செய்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்